மரணம்

புன்னகையை ஒழித்து
கண்ணீரை வளர்த்து
கல்லறை அமைக்க வரும்
காலானின் தூதனே

வருவது தெரியாது
வந்தாலும் புரியாது
வைத்தியமும் கிடையாது
வராதே மரணமே

வாழ்க்கையில் தோற்றவனுக்கு
மரணம் மிகப்பெரிய வெற்றி
வாழ்க்கையில் வென்றவனுக்கு
மரணம் படு தோல்வியாகும்


மரணத்தை காதலித்தால்
மங்கையவள் எமனாவாள்
மரணத்தையே அவள்
மாங்கல்யமாய் அணிவாள்

மனைவிக்கு விதவை
கணவனுக்கு தபுதாரன்
பட்டம் வழங்கிடும்
மரணமே மாண்டு போ

இரா சனத். கம்பளை-

எழுதியவர் : இரா சனத். கம்பளை- (10-Mar-13, 4:06 pm)
சேர்த்தது : raasanath
பார்வை : 176

மேலே