இப்படித்தான் வாழ்கிறார்கள்....

தங்கக்கூண்டுக்குள்
அடைத்து வைத்தாலும்

அங்கேயும்
விடுதலை வேண்டி
குயில் பாடுவதை நிறுத்தாது.....

அதன் சிறகுகளை
முறித்தாலும்
அதன் சிந்தனைகள்
சிறகடித்துப் பறப்பதை
சிதைக்க முடியாது.....

ஆயிரம் கோடி வேதனைகள்
அதனுள் இருந்தாலும்
அதன் குரலில்
அதன் சோகம் மிளிராது....

இப்படித்தான்
இன்றும் வாழ்கிறார்கள்....
என் இன மக்கள்...
சொந்த நாட்டிலேயே
அகதிகளாய்
அகதி முகாம்களில்..

கூண்டுக்குள்
அடைக்கப்பட்ட குயில்களாய்...

....................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (11-Mar-13, 10:48 am)
பார்வை : 133

மேலே