தினமும் தீட்டு .....!
ஒரு ஊரில் முதியவர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் காட்டில் சென்று மரக்குற்றி களை வெட்டி
பிழைப்பை நடார்த்தி வந்தனர் ....!
தினம் தோறும் வெட்டப்படும் மரக்கட்டையில் முதியவரின் கட்டை எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் இது இளைஞனுக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுத்தது ..மேலும் தான் கூடிய நேரம் மரக்கட்டையை வெட்டினான்
...அப்போதும்
முதியவரை அவனால் முந்த முடியவில்லை ..
ஒருநாள் முதியவரிடமே அந்த ரகசியத்தை கேட்டக ஆசைப்பட்டான் ...!
முதியவர் சொன்னார் அப்படி ஒரு ரகசியமும் இல்லை நான் தினம் தோறும் கட்டையை வெட்டிய பின் கோடரியை நன்றாக தீட்டுவேன்...!
என்ன உடல் சோர்வு இருந்தாலும் மண் போட்டு கோடரியை தீட்டிவிட்டே தூங்குவேன் ..மறுநாள்
இலகுவாக வெட்டுகிறேன் என்றார் ..!
இதுதான் வாழ்க்கை தத்துவம் யாராயினும் எந்த துறையிலும் தமது அறிவை தீட்டிக்கொண்டே இருந்தாலே வெற்றி உண்டு ...