நேரம் எங்கே ??

என்றாவது ஒருநாள் அவசரமாய்
செய்தி அனுப்பவோ பேசவோ
மட்டும்தான் நாம் அன்பை
நட்பை நேசத்தை பாசத்தை வளர்த்தோமா...

எங்கே சென்றது அந்த
உண்மை உறவுகள் எதற்காக
இந்த போலியான வாழ்க்கை
உங்கள் மனதின் நிம்மதி எங்கே ?...

பணத்தின் பின்னால் ஓடும்
இந்த போட்டியில் பின்பக்கம்
திரும்பி பார்க்க எத்தனை
மனிதருக்கு நேரம் இருக்கிறது ?.

ஈமச்சடங்கில் கலந்து கொள்ள
எவ்வளவோ பணம் வரலாம்
உண்மையில் எத்தனை மனம்
அழும் என்பது எப்போது புரியும் ??

எழுதியவர் : வீரா ஓவியா (12-Mar-13, 2:16 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 72

மேலே