வெண்ணிற ஆடை

வெண்சங்கில் பாலருந்தி
வெள்ளை மல்லி பூச்சூடி
வெண்பட்டு வஸ்திரம்
கட்டி வந்த மணாளனை
சிறுவிரல் பிடித்தேன்
வெள்ளை மனம் உள்ள
மச்சான் வெள்ளாமையா
சொல்லி போனான்
வெள்ளாடு குறுக்கே வந்து
ரத்த வெள்ளத்தில்
செத்து போனான்
உன் வாழ்க்கையோ
இனி வெண்ணிற ஆடைஎன்று
சொல்லி போனான் .

எழுதியவர் : சுசீ ப்ரின்சி (13-Mar-13, 12:06 pm)
பார்வை : 107

சிறந்த கவிதைகள்

மேலே