தண்டனை கொடுக்கும் காதல்

கண்கள் பேசிக்கொண்டு
அழகினை கோர்த்துக்கொண்டு
காதலாம்
காதல் யாதென அறியாமல்
உண்மையாம்
இவர்கள் காதல் மட்டுமாம்

உணர்வுகள் அடங்காது
உள்ளங்கள் பொறுமையாகது
உரையாடல் வெறுப்பாகாது
உளறுதல் உண்மையாகாது
காதலும் காதலாகாது
இவர்களும் காதலர்களாகாது

வேகத்தோடு வீரம் கொண்டு
வேகமாய் ஊடுருவும் காதல்
நொடிகளின் நோக்கம் இழந்து
நொந்து போகும் காதல்

அன்னையர்களின் அன்பை முறிக்கும்
அழகான கண்களில் கண்ணீர் வடிக்கும்
ஒன்று உதவாத மதம் உள்ளே வரும்
மதம் பிடித்த யானையாய் மாறி வரும்
மனிதர்களை மிருகமாய் மாற்ற வரும்

பெத்த மனம் பித்து பிடிக்கும்
இவர்கள் கைகளில் காதல் கொடி பிடிக்கும்
சாட்சி சொல்லும் மஞ்ச கயறு
சடங்கை சாகடிக்கும் சாட்சி கயறு

தேர்ந்தெடுத்த தேராய் அவள்
தேர் இழுக்க தயாராகும் இவன்
தேர் ஓட்டம் தெருக்களில்
தெருவே சிரிக்கும் சிரிப்புகளில்
சிரிப்பே இல்லா நிற்கும்
சிந்தனை இல்லா இவர்கள் வீடுகளில்

தடுமாற்றம் தடைகள் தாண்டி
தனிமையில் தத்தளிக்கும்
தன்டனையை அறிவுத்தும்
காதல் அழகான வாழ்கை காதலர்களுக்கு
நீச்சல் குளமான பொற்றோர் கண்கள்
நீந்தாத பாழான படகோ
பத்து கடல் தாண்ட பாதை போடும்

எழுதியவர் : Manikandan sugan (14-Mar-13, 2:15 pm)
பார்வை : 151

மேலே