என்றென்றும் மாறாதவை! மாற்றப்பட வேண்டியவை!
அரசியல் கட்சிகளின்
தேர்தல் அறிக்கை!
வறுமையை ஒழிப்போம்!
வேலைவாய்ப்பை அதிகரிப்போம்!
காஷ்மீர் எல்லையில்
பாகிஸ்தான் தாக்குதல்!
இந்தியா கடும் எதிர்ப்பு!
தமிழக மீனவர்கள்
இலங்கையால் சிறைபிடிப்பு!
தமிழக தலைவர்கள்
மத்திய அரசுக்கு கடிதம்
கர்நாடகா தமிழகத்திற்கு
காவிரிநீரை தராது
தமிழக அரசு
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தமிழக மின் தட்டுப்பாடு!
இன்னும் இரண்டு வருடங்களில் சரியாகும்
நீ தான் காரணம்
இல்ல நீ தான் காரணம்
பாரளுமன்ற கேள்விநேரம்!
எதிர்கட்சிகள் அமளி!
அவை ஒத்திவைப்பு!
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு!
நாடு முழுதும் எதிர்ப்பு!
அடுத்த வாரம் நாடு தழுவிய பந்த்!
இவை அனைத்தையும்
நேற்றும் பார்த்தோம்!
இன்றும் பார்க்கின்றோம்!
நாளையும் பார்ப்போம்!
ஏன் இன்னும்
பத்து வருடம் கழித்தும் பார்ப்போம்!
இவை
என்றென்றும் மாறாதவை!
மாற்றப்பட வேண்டியவை!