நண்பன் எழுதிய கவிதை

அந்த பழைய புத்தகம்
திருப்பி திருப்பி படிக்கிறேன்
அலுக்க வில்லை
புரட்டிப் புரட்டிப் பார்க்கிறேன்
புதுப் புது அர்த்தங்களில்
புதிய புதிய அத்தியாயங்களாய்
விரிகிறது
பழைய நாட் குறிப்புகள்
ஆனால் அன்றை இன்றாகக் காட்டும்
புதிய நாட்காட்டி; கிழிக்க முடியாத தேதிகள் .
காலத்தை மீறி நிற்கும் உணர்வுகளின் உண்மைகள்
வழி நடந்த பாதையில் இளைப்பாற
நிழல் விரிந்த சோலை
வாடி நின்றபோது அள்ளிப் பருகிட
வந்த குளிர் நீரோடை.
நெஞ்சோடும் நினைவோடும்
என்றும் என்னோடும் நடந்து வரும்
நெஞ்சில் நண்பன் எழுதிய கவிதை

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Mar-13, 7:16 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 135

மேலே