இலங்கைதனில் மறுபடியும் இராவணனோ

இலங்கைதனில் மறுபடியும் இராவணனோ எங்கள்
இளம்பெண்கள் கருவறுக்கும் காமுகனோ!
நிலம் பார்த்து நடக்கும் யாழ் தமிழ்ப்பெண் தன்னை
களம் காண வாய்த்த நீ ஓர் பாவியோடா!

சோம்பேறி சிங்களவன் சுற்றித் திரிந்த நிலம்
காம்பழுகும் முன்னரே கால்வைத்த எங்கள் இனம்
காடு திருத்திக் கழனியெலாம் செழிக்க வைத்து
நாடு கொழிக்க நாளும் உழைத்தனரே

பார் போற்ற வளம் சேர்த்து பண்பாடு காத்து நின்ற
மானமுள்ள எமது இனம் மாண்டும் துடிக்குதடா
ஈழத்து எம் தமிழர் ஈன சிங்களன் கையில்
மானத்தை காப்பாற்ற மன்றாடி மடியுதடா

என் உறவை தோலுரித்து ஏலம் விட்டான்
எங்கள் குல பெண்டிர்களை கருவறுத்தான்
ஒட்டுத் துணியகற்றி உட்பசியை தீர்த்திட்டான்
பிட்டம் தெரிய பெரும் தோட்டா துளைத்திட்டன்

ஆடு மந்தை போல் அடுக்கி தீயில் வைத்தான்
ஏட்டில் எழுத்தில் இறையாண்மை எரித்திட்டான்
நாட்டில் எவனும் நமக்கில்லை கேட்பதற்கு
அப்படியே போனாலும் அவனும் ஓர் காமுகனாய்

ஐயோ எந்தன் உயிர் அலறுதடா இலங்கையிலே
குய்யோ முறையோ எனும் கூக்குரல் கேட்குதடா
கர்ப்பிணி பெண் கருவறுத்து காற்றில் விட்டான்
தொப்புள் கொடி அறுத்து உயிர் துடிக்க வைத்தான்

வீதி எங்கும் எம் உறவின் உறுப்புகளின் சிதறல்
பாதி இறந்தும் இறவாத குற்றுயிரின் கதறல்
நாதியற்ற நிலை அந்த நடுக்காட்டில் நடக்குதடா
சோதனை பலவும் தொடருதடா தினம்தினமும்

நெல்வயல் எங்கும் நெருப்பில் - நம்மவர்
கழனிகள் யாவும் சிங்களன் பொறுப்பில்
வீடுகள் இடித்தான் வெகு பொருள் எடுத்தான்
காடினில் தஞ்சம் புகுந்திடின் சுட்டான்

என்ன கேட்டோம் எதை கேட்டோம் நாய்களிடம்
மண்ணை கொழித்தோம் வாழ்வுரிமை கேட்டோம்
உதிரம் குடிக்கும் ஓநாயே சிங்களனே - நீ
உருக்குலையும் நாள் உனக்குண்டு அறிந்திடுவாய்.

உடல் பொருள் ஆவி அத்தனையும் போச்சுதடா
கடல் தாண்டி நம்மினம் கதறி துடிக்குதடா - என்
மடலாக ஏற்றுக் கொள் மாக்கவிஞர் நண்பர்களே
உடனே உன் உணர்வுகளை உசுப்பி விடு வானிலே

எழுதியவர் : thinaara jayaraman (15-Mar-13, 9:57 pm)
சேர்த்தது : Thinaara Jayaraman
பார்வை : 101

மேலே