அன்றொரு நாள் பேருந்தில்....!!!!

நின்றிருக்கும் பேருந்தில்,
சென்றேற நாட்டமில்லை,
நகரும் பொது ஓட்டம் எடுத்தால்,
பெண்கள் நால்வர் நோட்டம் கொள்வர்..

இரவு நிலவொன்று வண்டிக்குள் இருக்க,
இலவம் பஞ்சு கண்ணம் கொண்டு..
நீண்ட மயிர் தலையினின்று வழிய,
நின்று வந்தாள் பெண்ணவள் ஒருத்தி..

சன்னலோரம் அமர்ந்து கொண்டு,
வீசும் காற்றை முத்தமிட்டாள்..
என் சுவாசக் காற்றும் அவ்வரிசையிலே,
உன் முத்தம் வாங்க நிற்கிறதே..

அவள் துப்பட்டாவைப் புறம் வீச,
தூசியாய்ப் பறந்தேன் நானே..
அவள் கண்ணழகைப் பார்த்து,
இளம் தூது சொல்லத் தானே..

கண்ணால் அவளைத் தீண்டல் செய்ய,
நான் முன்னால் சற்று நடந்து போக,
அவள் பார்வையால் என்னைத் தொட்டுவிட்டாள்,
பிறந்த பயனை நான் அடைந்துவிட்டேன் போலும்..

அவள் பார்வை படர்ந்தது எந்தன் மீதும்,
ஐயய்யோ, நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டாள் போலும்,
பற்கள் உதிக்க நகைத்தாள்,
என்ன நினைத்துச் சிரித்த்தாள்???

கண்ணக் குழியில் புதைத்து வைத்த,
புன்னகைப் புதையலைச் சிதறவிட்டால்..
சிதறியது, அவள் புன்னகை மட்டுமல்ல,
என் இதயமும் தான்..

வந்தது அவளது நிறுத்தம்,
வருடிய என் கண்களிலோ காயம்,
கண்ணசைத்து இறங்கிவிட்டாள்,
இக்கவிதை வடிக்கச் செய்துவிட்டாள்..

எழுதியவர் : பிரதீப் (16-Mar-13, 10:20 am)
பார்வை : 256

மேலே