எண்களுக்குள் அடங்கிய எண்ணங்கள்

நாகரிக மங்கையே !
என்னவளே !
என்னுயிர் காதலியே !

எண்களுக்குள் அடங்கிய
நம் எண்ணங்கள்
என்று வெளிப்படும் ?!

வெளிர்மஞ்சள் காலைப்பொழுது
வெளிப்படுத்தும்..
உன் நினைவுகளை
எப்படியடி மறைத்திடுவேன் ?!

அந்தி மாலைப்பொழுதில்
புத்தம்புது வெள்ளி
வெளிப்படுத்தும்..
உன் புன்சிரிப்பினை
எப்படியடி எதிர்நோக்குவேன் ?!

புனர்ஜென்மம் எடுத்ததாய்
ஆர்ப்பரிக்கும் நதிகளே !
கூறுங்கள்..

அருவியினின்று நதியாய்
மரித்து பிறந்த
அத்தருணங்களில்..

எத்தனை துன்பங்கள்
உன்னுள் உறவாடியதென்று !

என்னவளே !

என்றடி வெளிப்படும்..
எண்களுக்குள் அடங்கிய
நம் எண்ணங்கள் ?!

_மகா








எழுதியவர் : மகா (22-Nov-10, 8:17 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 434

மேலே