எழுத்து.காம் அனைத்து நண்பர்களுக்கும்

எழுத்து தளத்தின் அனைத்து நண்பர்களுக்கும் இந்த
மென்மையானவனின் இதய பூர்வமான வணக்கங்கள்

இத்தளத்தில் வலம் புரிகின்ற அனைத்து உள்ளங்களும் மேன்மையான உள்ளங்களே என்பதில் எனக்கு எவ்வித ஐயமும்
இல்லை

காரணம் எவ்வளவோ வக்கிரங்கள் கொண்ட வலைதளங்களும்,
பொழுது போக்கு வலைதளங்களும் இன்னும் கோடிக்கணக்கான
தளங்களும் உள்ள பட்ச்சத்திலும் தமிழ்ழை தேடியும் தமிழ் நண்பர்களை தேடியும் வந்து படிப்பதும்,தங்களின் கருத்துக்களை
பகிர்வதும்,தங்களுக்கு தெரிந்த,பார்த்த,கேட்ட நல்ல விஷயங்களை எழுதுவது என மேன்மையான பழக்கங்களை வைத்தே தங்களின் மேலான எண்ணங்களை அறிந்து மகிழ்கிறேன்.

இத்தளத்தில் புதிதாக இணைந்த நண்பருக்கும் பல வருடங்களாய்
இணைந்து இருக்கும் நண்பர்களுக்கும் பெரிய வித்யாசம் எல்லாம்
ஒன்றும் இல்லை

இது ஒரு பறவைகளின் சரணாலயம் இங்கு கொக்கு,நாரை,குருவி,மீன்கொத்தி,என்பல பறவைகள் குழுமும் இடம்(மருத்துவர்கள்,பொறியாளர்கள்,மாணவர்கள்,விவசாயிகள்,
எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் குழுமும் இடம்)ஆகையால் யாரும் யாருக்கும் சலித்தவர்கள் அல்ல

யாருக்கு எதை படிக்கவேண்டுமோ அதை தாரளமாக படிக்கலாம்
அதே போல் யார் என்ன எழுத நினைக்கிறீர்களோ அதையும் தாரளமாக எழுதலாம்(மற்றவர்களின் மனம் புண் படாமல் நாகரீகமாக)

இங்கு யாரும் யாருக்கும் அடிமைகளும் அல்ல,யாரும் யாருக்கும் தலைவர்களும் அல்ல,எல்லாம் நண்பர்கள் அவ்வளவே.தனிப்பட்ட முறையில் ஒருவரோடு கருத்து பகிர்வதாய் இருப்பின் தனி விடுகையில் அதை அன்பாக சுட்டி காட்டுங்கள் அதை தவிர்த்து
கருத்து போர் புரிகிறேன்,நீ செய்தது தவறு என பக்கம் பக்கமாக எழுத்துக்கள் மூலம் சண்டை போட்டு தன உள்ளத்தையும் கெடுத்து கொண்டு மற்றவர்களின் உள்ளங்களையும் காயப்படுத்தும் முயற்ச்சிகளில் தயவு செய்து செய்யாதீர்கள்

500 புள்ளிகள் பெற்றவர்க்கு இங்கு ஆஸ்கார் விருதும் ௦ 0 புள்ளி
பெற்றவர்க்கு தளத்தில் நுழையும் நுழைவு சிட்டு ரத்து பண்ணுவதும் இல்லை ஆதலால் இங்கு யாரும் பெரிய புள்ளியோ,யாரும் சிறிய புள்ளியோ இல்லை எல்லாம் வானில் மிதக்கும் ஜொலிக்கும் நட்ச்சத்திர கூட்டங்களே என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

எனக்கு தெரியாதது உங்களுக்கு தெரியும்,உங்களுக்கு தெரியாதது எனக்கு தெரியும் அதை நாம் தாராளமாக அன்பாய் ஆதரவாய் பகிர்ந்து கொள்ளலாம்,

அதை தவிர்த்து நெற்றிக்கண் திறக்க இங்கு யாரும் சிவபெருமானும் இல்லை,குற்றம் குற்றம் என சொல்லி சாம்பலாக நக்கீரனும் இல்லை

புதிதாய் வருகைத்தரும் நண்பர்களை இன்முகத்தோடு வருக வருக என வர வேர்ப்போம்,அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்தி தெரிந்து கொள்வோம்,நம்மிடம் உள்ள நல்ல விஷயங்களை அன்பாய் அழகாய் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்,

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் சுதந்திரமான பூரணமான வாழ்க்கையை தந்து அருள வேண்டுகிறேன்.

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (18-Mar-13, 1:41 pm)
பார்வை : 185

மேலே