ரஞ்சினிகுட்டி
என் ரஞ்சினிகுட்டி, பறவைகளை "ஊ" என்று தான் அழைப்பாள் ...
நாயையும் "ஊ" என்று தான் அழைப்பாள் ....
பூனையையும் "ஊ" என்று தான் அழைப்பாள்...
இன்று, இரவு உணவின் போது, வானம் நோக்கி "ஊ" என்றாள்...
பறவைகளை தேடிய எனக்கு, வெகுநேரம் கழித்துதான் புரிந்தது, அவள் நிலவையும் "ஊ" என்று தான் அழைக்கிறாள் என்று.....