...."மனதார வாழ்த்துங்கள்"....

மார்கழி மாத விரதத்தின் பலன்,
மனதுக்கேற்ற மணாளன் கிடைத்ததோ....
மாதவம் செய்த இந்த மங்கைக்கேற்ற
மாதவன் இவர் என்பது மறுக்க முடியாது...
மணாளனே மங்கையின் பாக்கியம் என்பதால்,
மனதுக்குள் குடியேற்றி துதித்திட்டதால்,
மறந்தும் கூட மையலற்ற சொற்கள்,
மன்னன் இவர் நாவினில் மலர்ந்ததில்லை....
மாயவன் சிவனை எண்ணி விரதம் பூண்டால்,
மங்காத வாழ்வு நிலைக்குமன்றோ....
மனச் சிறையில் சுரந்த காதல் மெல்ல வெளியேறி,
மட்டற்ற இன்பத்திற்கு வித்திட்டது...
மண்ணும் விண்ணும் பூமழைச் சொரிய,
மலர்ந்தது மகிழ்ச்சிப் பூக்கள் மங்கை வாழ்வில்..
மணமக்கள் வாழையடி வாழையாக வாழ்ந்திட
மனதார வாழ்த்துங்களேன் மகேசன் புகழ் பாடி....
.............!!!!!...........................!!!!!.....................