தொட்டுவிடும் தூரமல்ல .......
![](https://eluthu.com/images/loading.gif)
டிக்...டிக்...... என்று நானும் சுற்றி கொண்டே உன்னை விரட்டி விரட்டி பிடித்து விடுகிறேன்.
நீ என்னை சுற்றி சுற்றி வந்தே உன் முழு அழகின் கவர்ச்சியால் என்னை கவர்ந்தே என்னிடமிருந்து வெளிச்சத்தைப் பெற்று விடுகிறாய்.
இப்படியெல்லாம் என்னை ஏமாற்றுகிறாய் என்றால்.....
பொங்கி எழுந்து மோதி விளையாடும் அலையும் கூட ஓவென்று கூச்சலிட்டே என்னை விரட்டி விரட்டி பார்க்கிறது.
நானும் கரையின் அழகைக் காண கரையின் பக்கத்தில்...... ஏனோ நீர்ச்சுவடுகள் மணலிலிருந்து வரிகளாய் அல்ல. வளைவுகளாய் அல்ல.
என் பார்வையினைக் கட்டி இழுத்து உன் திசைப் பார்க்குமிடத்தில் மீண்டும் செல்லத் தொடங்கி விட்டாயா.......
இரு......இரு..... நானும் வரேன் என்று சிறுநண்டும் குடுகுடுவென்றே வேகவேக ஓட்டமிட்டே உன் பின்னே ஓடோடி வருகிறதே! மறுகரையைக் காண......
அடடே! இதேதான் வாழ்வும்கூட தேடிவிடும் தூரமல்லவே........
தொட்டுவிடும் தூரம் வந்ததும். கண்ணீர் துளிகளைச் சிந்துவதை விட.....
வியர்வை துளியானால்.......
அண்ணே! இந்தாங்கன்னா... சுண்டல்
என்னப்பா...... நிமிர்ந்தான்.....
துளிர்த்தது விடியல்......