எனக்குள் ஒரு ....... இருட்டு
என்னடா! ஒரே இருட்டா இருக்கே.
டேய்..... டேய்..... அந்தப் பக்கம் போகாதேடா......
ஏய்...... சீக்கிரம் போடா......
டேய்! எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா...
விளக்கை என் வழியிலேயே பிடித்து பாதை எந்தப் பக்கம் இருக்கோ காண்பிடா......
இருடா...... இருடா......
யாரோ..... வர காலடி சத்தம் கேக்குது. அங்கிருக்க மரம் பின்னாலே போய் மறைஞ்சுகலாமா வாடா... வாவா....... விளக்கை மறைச்சுக்கோடா......
ஏய் ! அவன் வராண்டா.....
ஏதோ! உஸ்...உஸ்....ன்னு சத்தம் வேற கேட்குதே பாம்பா இருக்குமோ?
ஏதோ! சுர்னு... ஊசி குத்துன்ன மாதிரி இருக்கே...... தேளு, பூச்சி ஏதாவது கடிச்சிருக்குமோ...
வேண்டாம்டா... வேண்டாம்..... இந்த விளையாட்டு. விட்டுடாதேடா.... மின்மினிபூச்சியை விட்டுடாதே பிடிபிடி...... வீட்டுக்கு போகிறத்துக்கு வழி தெரியாம போயிடும்.
ஆ...... ஏதோ கையைக் கடிச்சுடிச்சே அய்யோ.....! வலிக்குதே...
அம்மா! அம்மா! அலறி துடித்து விழித்து பார்த்தான். கனவு விழித்தது.......
என்னப்பா..... என்னப்பா....
வலிக்குதும்மா! விளக்கு காணோம்மா......! பறந்துடுச்சி.......!