போலி சாமியார் செல்லதாய்

காலையில் 5மணிக்கெல்லாம் ரேவதியும் அவளுடைய மருமகள் கோமதியும்
நடுநிக்காவூரின் செல்லதாயை தேடி சென்றனர். யார் அந்த செல்லதாய்? அவள்
வேறுயாரும் இல்லை.. கடவுளுக்கு இனையான ஒரு மாந்தீரிக பெண். அவள் சொல்வது
எல்லாம் பலிக்கிறது என யாரோ ஒருவர் ரேவதியிடம் கூற காலையிலே
கிளம்பிவிட்டனர் செல்லதாயை தேடி. ஒரு வழியாக செல்லதாயை தேடி
கண்டுபிடித்துவிட்டனர். நீண்ட வரிசை சுமார் 25 பேருக்கு மேல் வரிசையில்
நின்று கொண்டு இருந்தனர். அந்த வரிசையில் ரேவதியும் கோமதியும் நின்றனர்.
ஒவ்வொருவருக்கும் குறி சொல்லி முடிக்க கிட்டதட்ட அரைமனிநேரம் எடுத்து
கொள்கிறாள் செல்லதாய். நீண்ட நேரத்திற்க்கு பிறகு செல்லதாயை
நெருங்கிவிட்டனர் ரேவதியும் கோமதியும். செல்லதாய் இருவரையும் அமரசொல்ல
இருவரும் செல்லதாயின் முன் இருந்த மனையின் மீது அமர்ந்தனர்.உங்களுக்கு என்ன பிர்ச்சனை என மெல்லிய குரலில் செல்லதாய் கேட்டாள். என்
கணவர் என்னைவிட்டு ஒடிபோய் மூன்றுமாதம் ஆகிறது. அவர் எங்கே போனார், என்ன
ஆனார் என ஒரு செய்தியும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை என ரேவதி
கூறிக்கொண்டே இருக்க திடிரென செல்லதாய் குழவி சத்ததோடு கத்தி கத்தி பேச
ஆரம்பித்துவிட்டாள். " உன் கணவன் வடக்கு திசைநோக்கி சென்றான் சென்ற
இடத்தில் மூன்று கண்டங்கள் அவனை சூழ முதல் கண்டமான பாம்புலிருந்து அவன்
தப்பி இரண்டாவது கண்டமான நீரிலிருந்து அவன் தப்பி மூன்றாவது கண்டமான
விபத்தில் சிக்கி கொண்டான்" இனி அவன் உங்களுக்கு கிடைக்கமாட்டான். அவன்
சாம்பால்கூட தற்போது இல்லை. அவன் செய்த பாவங்களின் பயன்தான் இது என
சொல்லி முடிக்க... ரேவதியும் கோமதியும் கண்ணீர் வழிய அவள் கூறுவதை
எல்லாம் கேட்டுகொண்டே இருந்தனர். மேலும் உன் கணவனின் ஆத்மா சாந்தி
அடையாமல் உள்ளது. அதற்க்காக ஒரு பூஜை நடத்த வேண்டும் என செல்லதாய் கூற
என்னவென்று இருவரும் கேட்டனர். அம்மாவுக்கு ( செல்லதாய்க்கு) 25,000
பணமும் ஒரு ஆடும் 2பவுன் நகையும் செலுத்துங்கள் பரிகாரம் என்னவென்று
கூறுகிறேன் என கூறி முடித்தாள். சரிங்க தாயே என கூறி இருவரும் கண்ணீரோடு
விடை பெற்றுக்கொண்டனர். இருவரும் வேதனையின் உச்சத்திற்க்கு சென்று
துக்கம் தாங்காமல் அழுதுகொண்டே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு
இருந்தனர்.அப்போது ஒருவர் கோமதி என அழைக்க திரும்பி பார்த்த கோமதிக்கு ஓர் இன்ப
அதிர்ச்சி! தன் கணவர் கையில் ஓர் பையோடு ஏன் இங்கே வந்தாய் என கேட்டார்..
கோமதி எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து நின்றாள்.. தன் அம்மாவை பார்த்து
ஏன் அம்மா இங்கே வந்தீர்கள் என கேட்டார். உன்னை தேடிதான் என ரேவதி கூற
உங்களோடு சண்டை போட்டுவிட்டு வந்த நான் இங்கு ஒரு கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்துவிட்டேன். மாதம் 20,000 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அதான்
இங்கே நின்றுவிட்டேன். இன்றுதான் உங்களை பார்க்க வரலாம் என கிளம்பி
வந்தேன்.... வந்த இடத்தில் நீங்கள் அழுது கொண்டு இருக்கீங்க ஏன்? என
கேட்டார்.. எல்லாம் உன் பிரிவை எண்ணிதான்ட என ரேவதி கூறி தாங்கள் ஏன்
அழுதோம் என்ற உண்மையை மறைத்து மூவரும் பேருந்து ஏறி வீடுபோய் சென்றனர்.. [நன்றி என்னுடைய முதல் சிறுகதையை பதிவு செய்து உள்ளேன்.. தங்களுடைய
கருத்தை பதிவு செய்யுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.]

எழுதியவர் : கார்த்திக் (19-Mar-13, 8:25 pm)
பார்வை : 275

மேலே