'லேட்டஸ் லவ்'

'லேட்டஸ் லவ்'

உன் இதயத்துக்குள்
நுழைவதற்காக காதல்
பாதையைக் காட்ட
'கூகுள்' கூட மறுக்கிறதே
பெண்ணே!

உனக்காக 'ஸ்கைப்'பில்
நித்தமும் காத்திருப்பதால்
என் வாழ்க்கையே காதல்
கடிகாரமாகிவிட்டதடி!!

பகிரும் அனைத்தையும்
'பேஸ்புக்'கில் 'லைக்'
பண்ணும் உனக்கு என்னை
மட்டும் ஏன் பிடிக்கவில்லை?

அன்பே! நீ என்னை மறந்தாலும்
என் இதயத்தின் 'பாஸ்வேட்'
நீதானடி! அது இல்லையேல் - என்
இதயம் இல்லையென்றாகி விடும்...

இரா. சனத், கம்பளை

எழுதியவர் : இரா. சனத், கம்பளை (21-Mar-13, 12:58 am)
சேர்த்தது : raasanath
பார்வை : 259

சிறந்த கவிதைகள்

மேலே