மண்டியிடுகிறேன்

சமயங்கள்
சலனப்பட வைத்த போதும்
சபதங்கள் -மீண்டும்
புதுப்பிக்கப் படுகிறது .

இதயம் இடத்தை விட்டு
நழுவிவிட எத்தனிக்கும் போது
உறவுகளால் -உணர்வுகள்
மட்டம்தட்டப் படுகிறது

சுயநலங்கள் சில வேளை
விஸ்வரூபம் எடுக்கும் போது
சிந்திக்கும் திறன்
திராணியற்றுப் போகிறது

விதியென்று என்னை நோவதா
விதித்தவன் உன்னை நோவதா
படைத்தவன் உன் மேல்
பிரித்தறியத் தெரியாத கோபம்
இறைவா !!!என்னை மன்னித்து விடு ..

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (21-Mar-13, 3:06 pm)
சேர்த்தது : hafeela
பார்வை : 107

மேலே