அவள் என்பவள்...

அவளின் அறையில்
ஆங்காங்கே
சிதறி கிடந்தவைகளில்
அவள் கனவும் ஒன்று...

அவளின் பாதைகளில்
கசிந்து கிடந்த
குருதியில்
முற்களால் நனைந்து கிடைத்தது
அவளின் பூக்கள்...

அவளின்
காணாமல் போன
மார்புகளில்
பதிந்து கிடந்தது
அவளின் குழந்தையின்
இதழ்களில்
காய்ந்து கிடந்த
மரணங்களின் பால்...

அவளின்
ஆசைகளின்
நம்பிக்கைகளின்
நூல் அறுபட்டு
வீசியெறிந்த கணமொன்றில்
அவளின்
குளியலறையில்
தனித்து விடப்பட்டிருந்தது
அவளின் பொட்டு....

அவளின் தேகம்
தாங்கிய ஆடைகள்
கொண்ட வரைபடத்தில்
தொலைந்து போய் கிடந்தது
அவளின் தேசம்.....

எழுதியவர் : கவிஜி (21-Mar-13, 11:07 am)
பார்வை : 153

மேலே