தொலையாத நட்பு!

தோழிக்கு மட்டுமே
தெரிந்த உண்மை
படிக்கயிலேயே வரும்
பருவகால காதல் கதை!
அவரவர் விருப்பப்படி
எங்கெங்கோ சென்று விட்டோம்
ஆனாலும்
தொலைபேசியில் அழைத்தவுடன்
துயரங்கள் பகிர்ந்து கொள்வோம்
மனது என்னவோ லேசாகிவிடும்
தொலைதூரம் சென்றாலும்
தொலையாத எங்கள் நட்பு!

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (21-Mar-13, 5:56 pm)
பார்வை : 383

மேலே