என் உயிர் நண்பனே...!

சிறுவயதில் விழுந்தபோது ..
பலர் கைகொட்டி சிரித்தபோது -நண்பா
நீ மட்டும் எனக்கு கை தந்தாய் ...
எழுந்திரடா ...என்றாய் ...!
இளவயதில் காதலித்தேன் ...
காதலால் அழுதேன் ..காதலி
அழுதாலோ என்னவோ ..
என் நண்பண் என்னோடு நீ
மட்டும்தான் அழுதாய் -தோள்தட்டி
வலிமையையும் தந்தாய் ...
வாழ்க்கை வயதில் வாழ்க்கை ..
துணையை இழந்து தனிமை பட்டபோது ..
நண்பா நீ மட்டும் தானடா ..
துணையாக இருக்கிறாயே ...