அந்த ஐந்து நிமிடம்
அலுவலகத்தில் புதிதாய் சேர்ந்த தோழியை அறிமுகப்படுத்த என் அறைக்கு வந்தாள்..
என் அறைக்குள் இருந்த அனைவரையும் அறிமுகபடுத்திவிட்டு கடைசியாக என்னை அறிமுகபடுத்த என்னிடம் வந்து ,
"இனி இவள்தான் என் வேலைகளை பார்க்கபோகிறவள் நான் இன்னும் ஐந்து நாள்கள் மட்டுமே வேலைக்கு வருவேன் எதாவது சந்தேகம் கேட்டால் உதவுங்கள் " என்றாள்...
அந்த கணம் ,
அவள் சொன்ன அந்த வார்த்தை என் காதுகளுக்கு
"உனக்கு பார்வை ஐந்து நாள்கள் வரைதான் " என்று அவள் சொன்னது போல் இருந்தது ...

