தண்ணீர் கோலங்கள்,,,

தண்ணீர் கோலங்கள்,,,

நெடுநாட்களாகவே
உன் சந்திப்புகள் இல்லை

தேடிவந்த நாட்களிலும்
உதாசீனங்களே
உனக்கு சொந்தமானது

உன்னை நேசிக்கிறேன்
என்றும் இவன் அன்றெல்லாம்
உன்னிடம் சொல்லியதில்லை

என் ஒவ்வொரு முறையின்
உரையாடல்களிலும் நீ என்னால்
தள்ளிவைக்கப் பட்டவளாய்
இதயம் சிதைக்கப்பட்டவளாய்
கண்ணீர் சிந்தினாய்

காதல்குறி கண்ணாடி மாதிரியை
கைய்யிலேந்தியவனாய் மேலே பறந்தேன்,,,

எண்ணங்களின் கிளர்ச்சியிலே
எல்லாம் மறந்தவனாய்
கைவிரித்த கணத்திலே
பொத்திவைத்த காதல்குடுவையை
கைத்தவறவிட்டவனாய் நின்றேன்

உடைந்து சிதறிய காதல்துகள்களில்
உன் புன்னகை விழிவழி வழிந்தோடும்
குருதிக்கண்ணீரினை பார்த்தும் உணர்ந்தும்
வெறுமனே வேடிக்கைப்பார்த்து சிரிக்கிறேன்

நீ என்னை மறந்திருப்பாயா
என்றும் தெரியவில்லை,,

மறந்த என்னை மீண்டும் உனக்கு
நினைவு கூறுகிறேனா
என்றும் தெரியவில்லை,,

அவ்வப்பொழுதுகளில் உன்னை
நெருங்கிவிடவும் செய்கிறேன்

இவையெல்லாம் உன் நினைவிலே
இவன்மட்டும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனா,,
என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலில்தான்

சாயம்பூசிய முகத்திரைக்கப்பால்
சில இதழ்விரிசல்கள்,,

இவை அழுகையா,,
இல்லை சிரிப்பா,,
யாருமே அறிந்திராத
ஒரு ஏமாற்ற வாழ்க்கை,,,

நடனமாடியப்படியே
சிரிக்க வைக்கிறேன்

இங்கு கொட்டிச்செல்லும்
என் வார்த்தைமழைகள்
வெறும் வலிகளா
வெறுப்பா,,,
இல்லை வர்ணனைகளா
இல்லை ஆறுதல்களா
இதை வாசிப்பவர்களுக்கு என்று யோசியாமல்,,,,

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Mar-13, 2:37 pm)
பார்வை : 333

மேலே