நிஜங்கள் அற்ற நிழல்
நீதியின் தேவதையே
உனக்கே தெரியாமல்
நீதி தாழ்ந்தும்
அநீதி உயர்ந்தும் இருக்கிறது
கொஞ்சம் பார் !!!!!
அஹிம்சை இங்கே
ஆதரவற்று இருக்கிறது
அஹிம்சை வாதிகளும்
அனாதையாய் இருக்கிறார்கள் !!!
காந்தியே !!
வருடம் தோறும் -உம்
சிலைக்கு வர்ண மாலைகள்
இட்டோம்-- ஆனால்
உங்கள் காந்தியத்தை
மட்டுமா இழந்துவிட்டோம் .
பாரதியே !!!
ஒளி படைத்த கண்ணினாய்
வா !! என்றீர் ..
வந்தோம் .
உறுதி கொண்ட நெஞ்சினாய்
வா !! என்றீர் ...
வந்தோம் ..ஆனால்
எமை வழிநடத்தும்
பாரதி இன்றி விழிகள் கசிய
நிற்கிறோம் ...
கட்டுச் சோறோடு
பூமிக்கு இளைப்பாற
வந்த மனிதனிவன்
பூமியின் பொருள் கண்டு
அருள் தேடுகிறான்..
வந்த வழி தொலைத்தவனாய்
போகுமிடம் மறந்தவனாய் ...
இறைவனவன் !
அச்சில் வார்த்த பதுமைகள் கூட
எச்சில் பொறுக்கும் புதுமை கண்டு
கலங்கும் உள்ளத்துடன் ..
நீதியின் தேவதையே !!!
உன் வருகைக்காய் ...