நீ சிரிக்கவேண்டுமென்பதற்காகவே ..

நீ சிரிக்கவேண்டுமென்பதற்காகவே
ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பேன்
நான் சொல்வதனாலேயே
நீ சிரித்துக்கொண்டேயிருப்பாய்...

உன் வேதனைகள் என்னிதயத்தை
அமிழ்த்திடும் கண்ணீரில்...
கண்ணீரில் உனை மூழ்கவிடாதிருக்க
கதைகள் பல பேசுகின்றேன்
கற்பனைகள் பல சேர்க்கின்றேன்...
சோகங்களை உள்ளத்தின்
ஆழத்தில் புதைக்கின்றேன்
சுகங்களின் இராகங்களை
நம்மோடு இணைக்கின்றேன்...

உனக்காக வாழ்ந்திடவே
என்னிதயம் துடிக்கிறது
உன்னோடு சேர்ந்திடவே
என்மனது தவிக்கிறது
உன் துன்பத்தையும் பங்கிடவே
என் நெஞ்சு இருக்கிறது ..,

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (24-Mar-13, 10:20 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 136

மேலே