நிலாவும் குற்றவாளியே!

இரவில் அரங்கேறும் கொடுமைகளை
அறிந்தும் நீ மௌனம் காப்பதால்
நீயும் குற்றவாளியல்லவா நிலவே?
இதை உணர்ந்து வாழ்வதாலா
நீயும் சிறைக்கைதிகளைப் போல
வெள்ளை ஆடை அணிகிறாய்
வெண்மதியே?
வெட்கத்தால் இரவில் மட்டும்
முகம் காட்டும் உனக்கு
இயற்கை அன்னை வழங்கப்போகும்
தண்டனைதான் என்ன?
கைதுசெய்வர் என்ற அச்சத்தால்
நட்சத்திரப் படைகளுடன் வானில்
வலம்வரும் திங்களே உனக்கு
மனட்சாட்சி இல்லையா?
பகலில் உன்னை மறைக்கும்
பகலவன் கூட குற்றவாளிதானே?
- இரா.சனத்
(கம்பளை)