என் கண்ணீர் !!!!இப்படிக்கு விளைநிலம்

//சூரியன்//
உழைத்தே உருக்குலைந்து போன விவசாயிக்கு
ஊரடங்க கொள்ளிவைக்க நானும் சளைத்தவனில்லை ....

//மேகம் //
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க
தமையனுக்கே தயக்கமாம்
எட்டா உயரத்தில் இருக்கும் நானொன்றும்
இளிச்சவாயனில்லை....

//மழை//
கைமாறு கருதாமல் வர
என்னையே கட்டுக்குள் கொண்டு
கருவாக்கி வாதிடுவதற்கு
அரசியல் விளையாட்டாம் ......

//மரம்//
உங்களின் உயிர் ஆதாரம் என்னில்
என்னுயிரோ ஆரவாரமில்லாமல் உங்கள் கையில்
இருவருக்கும் இறுதி பயணம்
இன்றோ நாளையோ -இறுதிசடங்கிற்கு
உங்களுக்கும் நானே
எனக்கும் நானே......

//நிலம்//
என்உறவினை கட்டிடத்திற்கு சமாதியாக்கும்
கயவர்க்கு இயற்கையின் கருணை எதற்கென்று
சூரியனுக்கும் மேகத்திற்கும்
மழைக்கும் மரத்திற்கும்
நான் விட்ட கண்ணீர்தான்
உங்கள் கண்களில் அமிலமாக ........

உங்களின் உல்லாசத்திற்க்கு
எங்களை காவு கொடுக்கும்
உமக்கு நாங்கள் செய்யும் கைமாறு கசக்கிறதா????
கவலையில்லை....... கண்டிருங்கள்
இன்னும் தொடரும் எங்களின் இரும்புப்பிடி ....

எழுதியவர் : bhanukl (25-Mar-13, 11:05 am)
பார்வை : 138

மேலே