ஈசன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒன்றாய்க் காண்போர்க் கொன்றாகத் தோன்றி
இரண்டாய் நிற்பத்தர்க் கிரண்டென நிற்ப
மூன்றாய் காண்போர்க்கு முத்தேவ பதியும்
முப்பத்திமுக் கோடி ஒன்றில் மூன்றார்க்கும்
சூன்ய சான்றோர்க் கல்ல பராபரனும்
எங்குங் காண்போர்க் கங்கனமே யாயும்
நுண்ண னென்பார்க்கு நுண்ணு வனாயும்
அனேக னென்போர்க் கனேக னாயும்
அரூ பான்றோர்க் கரூபனாய் நின்றும்
அபாவ மென்போர்க் கங்கனமே யாயும்
அன்பில் கனிவா னவனே ஈசன்.