ஒரு சிப்பி மூன்று முத்து - 2
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு சிப்பி மூன்று முத்து !!
சிப்பி – செம்மல் இளங்கோவன்
இடம் : Coimbatore
பிறந்த தேதி : 08-Apr-1978
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 31-Aug-2011
பார்த்தவர்கள் : 99
புள்ளி : 23
செம்மல் இளங்கோவன்..அழகான பெயர். புனைப் பெயராக இருக்கலாம். ஒரு சில படைப்புக்களைத் தவிர பொதுவான பாடுபொருள்களை எடுத்துப் பாடி இருந்தாலும் ஒரு வித்தியாசமும் அழகும் இருக்கிறது இவரின் வரிகளில். கருத்துக்களே இல்லை என்று சொல்லும் அளவில் கவனிக்கப் படாமல் இருக்கிறார் இந்த அன்பர்.
கலாமன்றத்தின் இந்த படைப்பின் மூலம் இவரை சரியான முறையில் நீங்கள் அங்கீகரித்தால் நல்லதொரு தரமுள்ள படைப்பாளியாக இவர் மிளிருவார். ஐயமில்லை!
மூன்று முத்துக்கள் –
ஆத்தா – கவிதை எண் – 50377
மிக மிக அருமையான எண்ணவோட்டம் காணமுடிகிறது..செம்மலின் செம்மையான படைப்பொன்று இது. இந்த எழுத்து தளத்தில் வட்டார பாசையில் மிக குறைவான படைப்பாளிகளே கச்சிதமாய் எழுதி வருகிறார்கள். அவர்களுள் இவரும் ஒருவராவார் இனிமேல்.செத்துப் போன ஆத்தாவுக்கு எழுதிய வரிகளில் இன்னும் உயிர் இருக்கிறது !
-----------------------
குயவனின் வீடு – கவிதை எண்- 110394
மறக்க கூடா ஒரு உழைப்பாளியான குயவனை மறந்துவிட்டவர்கள் ஏராளம்.
பலரும் பாடாத ஒரு பாடுபொருள். நீள வரிகள் இல்லையென்றாலும் கவிதை என்ற சொல்லுக்குள் அடங்குகிறது அழகாக இவரிகள்.
--------------------
கொலைவெறி – கவிதை எண் – 50375
மனித நேயமும் , மக்கட் பண்பில்லா மானுட குணமும் ஒரு உழவு இயந்திரத்தில் நம் ஈழத்து தொப்புள் கொடி சொந்தங்களை அள்ளிச் செல்லும் கொடூர காட்சியுடன் வரிகள் அலறுகிறது இங்கே
---------------------------------------
செம்மல் இளங்கோவனின் எல்லா படைப்புக்களையும் பார்த்து நிறை குறைகளை கூறி இந்த படைப்பாளியை ஊக்குவிக்க வேண்டும் நல்ல உள்ளங்கள் !
--------------------
ஒரு சிப்பி மூன்று முத்து என்ற தலைப்பின் கீழ் இது போன்ற படைப்பாளிகளை மேடைக்கு அழைத்து கௌரவப் படுத்துவதில் கலாமன்றம் சந்தோசப் படுகின்றது. கலாமன்றத்தின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் குறிப்பிட்ட சில படைப்பாளிகள் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் மட்டுமல்ல, உண்மையிலும் தம் தோழர்களின் வளர்ச்சியில் அவர்கள் காட்டும் அக்கறையும் சந்தோசம் தருகிறது!
-----------------
கலாமன்றம் – சர்ச்சைகள் , முரண்கள் தாண்டிய ஒரு பயணத்தை விரும்புகிறது !