வருகிறது பிரிக்ஸ் வங்கி....அடுத்து பிரிக்ஸ் கரன்சி...! அதற்கு அடுத்து...?
வருகிறது பிரிக்ஸ் வங்கி....அடுத்து பிரிக்ஸ் கரன்சி...! அதற்கு அடுத்து...?
தென் ஆப்ரிக்காவில் டர்பன் நகரில் நேற்று முதல் இன்று வரை இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடந்து வருகிறது. ஐந்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை இயற்றி வருகிறார்கள்..இதன் முதற் கட்டமாக ஐந்து நாட்டின் நிதி அமைச்சர்களும் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர்...பிரிக்ஸ் வங்கி துவங்குவதற்கு...
இந்த வங்கியின் மூலம் நிதி மூலதன திரட்டு...வளர்ந்து வரும் மற்றும் நடப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குதல், குறிப்பாக உலக அளவில் செல்வாக்கு செலுத்தி வரும் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த வங்கி செயல்படும்...ஆக, நேட்டோ நாடுகளுக்கு ஆசியாவில் வைக்கப்படும் முதல் ஆப்பு தான் இந்த பிரிக்ஸ் வங்கி என்று கருதலாமா...?
சவுத் ஆப்ரிக்காவின் நிதி அமைச்சர் பிரவின் கோர்தன் கூறுகையில், நாங்கள் இந்த வங்கி துவங்குவதற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்..நடப்பில் இருக்கும் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். நிதி நிறுவனங்கள் மேற்குல நாடுகளை அவர்களின் நலன்களை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன என்றார். நாங்கள் ஆசியாவின் நலன்களை முன்னிறுத்துவோம் என்றார்..
பிரேசில், ரசியா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் இந்த பிரிக்ஸ் வங்கி...வங்கியை தொடங்கி பிரிக்ஸ் கரன்சி என்று நேட்டோ நாடுகளுக்கு போட்டியாக களத்தில் குதித்து விட்டார்கள். நமக்கு வரும் சந்தேகம் எல்லாம்..இந்த ஐந்து நாடுகளையும் ஒற்றுமையாக வளர விட்டு விடுவார்களா...? அமெரிக்காவும் பிரிட்டனும் என்பதே...?
அல்லது நேட்டோ நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடுமோ உலகில்...?
சங்கிலிக்கருப்பு