தமிழ் சமுதாயத்தின் ஓர் வஞ்சனம்

இலக்கியம் என்பது வெறும் கவிதைகளின் வடிவங்கள் மட்டும்தானா?

கவிதை வடிவில் படைப்பவருக்கு மட்டும் ஏன் சிறப்பு அங்கீகாரம் கிடைக்கிறது?

உரைநடை, கட்டுரை, கதை, நாடகம் எழுதுபவர்களுக்கு ஏன் எழுத்தாளர் எனும் அங்கீகாரம் கிடைப்பது சற்றே சிரமமான ஒன்றாக இருக்கிறது?

பழங்காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம் வரை, கட்டுரை, கதை எழுதுபவர்கள் ஏன் மனதில் நிலைபெறும் இடம் பெறுவதில்லை?

நாம் அங்கீகரிக்க மறுக்கிறோமா அன்றி அப்படி ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

எழுத்தாளர்கள் சிவசங்கரி, அனுராதா ரமணன், சுபா, ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், லேனா தமிழ்வாணன், கல்கி, பாலகுமாரன், இவர்கள் ஏன் நினைவு கூரப்படுவதில்லை?

கவிக்கோ அப்து ரஹ்மான், கவிஞர் மீரா, தாமரை ஆகியோருக்கு கிடைக்கும் ஒரு பரபரப்பு அங்கீகாரம் எழுத்தாளர் என வழங்கப்படும் நபர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?

ஏன் தமிழ் அறிவாளிகள், தமிழ் புலமை பெற்றவர்கள் என்று தம்மை பறைசாற்றி கொள்பவர்கள் கவிதை படைப்பதை மட்டுமே ஒரு வீம்பு நியதியாக (ப்ரெஸ்டீஜ் இஷ்யூ) வைத்திருக்கிறார்கள்?

எழுதியவர் : தளம்கருத்து (28-Mar-13, 12:32 am)
சேர்த்தது : THALAMKARUTHTHU
பார்வை : 99

மேலே