அவள் விரல்களின் தயைவில்

எண்ணிலடங்கா ஸ்வரங்களை
ஈன்று எடுத்தும்..
இன்றும் கர்ப்பம்
சுமந்தே வாழ்கிறாய்..!

கம்பிகளுக்குள்
சிறைப்பட்ட ஸ்வரங்கள் !
சங்கீதவானில்
சிறகடித்து பறக்கிறது..
அவள் விரல்களின்
தயைவில்..!

என்னவளின்
உற்றத்தோழியாய்..
அவளின் அரவணைப்பில்
நீ..!

நீ.. வீணை !

_ மகா




எழுதியவர் : மகா (24-Nov-10, 7:06 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 450

மேலே