என் ரகசியமான ரணங்கள்...!

* என் உணர்வுகளுடன்
உறைந்து போனவளே...!
நீயின்றி நான் கழித்த
என் இறந்த காலங்கள்
இதோ உனக்காக....!
* வறுமையின் மடியில்
நான் மடிந்து கொண்டிருந்ததை
உணராமல் உன் மடித்தேடிய
என் மடமையை நினைத்து
சிரித்துக் கொண்டேன்
சில காலம்....!
* கலந்துரையாடிய
என் கல்லூரித் தோழர்களுடன்
என் காதலை காவியமென
சொல்லிக் கொண்டேன்
சில காலம்...!
* உறக்கத்தில் உலா வரும்
உன்னைப் பற்றியக்
கனவுகளுக்காக சிலாகித்து
காந்திருந்தேன் சில காலம்....!
* உன் எழுத்துக்கள்
அடங்கிய ஏடுகளை
தடவிப் பார்த்து
தத்தளித்தேன் சில காலம்...!
* உன் கரங்களில்
வாழ்ந்த வளையல்களை
முகர்ந்தது பார்த்து
மோட்சம் பெற்றேன்
சில காலம்....!
* "உன்னை பாதைகளில்
பார்த்து விட மாட்டோமா...?"
என்று பதைபதைத்துக்
கிடந்தேன் சில காலம்....!
* "அவள் மனதின் எங்கேனும்
ஒரு மூலையில் நான்
படிந்திருப்பேனா?"
என்று நினைத்து
நித்திரை இழந்து
திரிந்தேன் சில காலம்...!
* வெட்கமின்றி கூறுகிறேன்....!
காதல் ஒரு தீ...!
அதை வெந்த பின்பே
தெரிந்து கொண்டேன்....!