!!!என்னவனின் நினைவுகளால் தோற்கடிக்கப்படுகிறேன்!!!

ஒவ்வொரு நொடியும்
போராடி தோற்று போகிறேன்...

என்னுள் துடிக்கும்
என்னவனின் நினைவுகளால்....

மறந்து சென்றவனை
மறக்க துடிக்கிறது ...

காதல் காயங்களால்
அடிபட்ட என் இதயம்...

உண்மை அன்பை
உதறி சென்றவனின் நினைவுகள் ...

வாழ விடாமல் என்னை
நித்தம் நித்தம் தோற்கடிக்கிறது
அவன் காதல் நினைவுகளால்...

என்னை நீ மறந்து
சென்று பல யுகங்கள் கடந்து
விட்டது ...

உன்னை நான் மறக்க
முயன்று தோற்று கொண்டிருக்கிறேன்....

ஒவ்வொரு நொடியும் என்னுள்...
நம் காதல் நினைவுகளால்...

மறக்க தெரியவில்லை
உன்னையும் நம் காதலையும்...

மறக்க முடியவில்லை..
என்னை மறந்து விடடி...
என்று நீ கூறிய
வார்த்தைகளின் வலிகளை....

மறந்து சென்ற
உன்னை மறக்கும்
அந்த நொடி

நான் மறந்து விடுவேன்
இப்புவியில் வாழ்வதை....

உன் நினைவுகள் என்னுள்
வாழும் வரை
துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயம் ...

நீ என்னிடம் விட்டு சென்ற
நம் காதல் நினைவுகளே
போதும் ....

என் மரணம் வரை
உன்னிடம் நான் பேச....

உன் நினைவுகள் எனக்குள்
துடிக்கும் வரை மரணம்

என்னை தொட்டு சென்றாலும்
உன் மீது நான் கொண்ட காதலுக்கு

மரணம் இல்லை என்பதை
உணர்கிறேன் ....

உன் நினைவில் -நான்
தொலைக்கும் நிமிடங்களில்....

எழுதியவர் : சங்கீதா.k (31-Mar-13, 12:41 pm)
பார்வை : 242

மேலே