ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்!

அரக்க குண
இருளை அகற்றி
அன்பேனும் ஒளியை
ஏற்றி வைத்த
இயேசு பிரான்
உயிர்த்து எழுந்தாரே!

போர் கொண்ட
பூமியில் பூமழை
பொழிய செய்து
அமைதியை நிலை
நாட்டிய பரிசுத்த
ஆண்மா மீண்டெழுந்ததே!

நம் பாவங்களை
தன் குருதியால்
கழுவி சுத்தம்
செய்த செம்மல்
புழுதி நீக்கி
புத்துயிர் பெற்றாரே!

சிலுவையில் அறைந்தவர்களுக்கும்
கூர் ஈட்டி
கொண்டு குத்தியவர்களுக்கும்
மாறாக அன்பையும்
ஆசிகளையும் வழங்கிய
வள்ளல் முளைத்தெழுந்தாரே!

அன்பு தோழர்கள்
அனைவருக்கும் புனித
ஈஸ்டர் தின
நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (31-Mar-13, 2:17 pm)
பார்வை : 2030

மேலே