அனாதை

சுனாமி குழந்தையையே அனாதை ஆக்கலாம்
புயல் குழந்தையே பெற்றோரிடமிருந்து பிரிக்கலாம்
விபத்தின் முடிவு பிள்ளைகள் அனாதை ஆகலாம்
நோயின் காரணமாய் பெற்றோரை இழக்கலாம்
காமத்தின் இச்சையில் பெற்ற பிள்ளையே
குப்பை தொட்டியில் வீசுவது தர்மமா
தொட்டில் குழந்தையா ஆக்குவது நியாயமா
அரை dozen பெற்ற தாய் அந்நாளில்
மூன்று வேலை கஞ்சி கொடுக்க இயலாமல்
அனாதை விடுதியில் கண்ணீருடன் சேர்த்து
குழந்தையின் வயிற்று பசியே ஆற்றினால்
இன்று
காதல், காம இச்சை, அவசரம், புரிந்து
கொள்ளாமை, ஈகோ, என பட்டியல் நீள
பெற்றோர் இருந்தும் அனாதை ஆகும்
பச்சை பிள்ளைகள், குப்பை தொட்டியிலும்
மின் வண்டி கழிபிடத்திலும்,

மனது வலிகிறது நாகரிகம் என்ற பெயரில்
அநாகரிகம் தலை விரித்து ஆடுகிறது

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (31-Mar-13, 10:25 pm)
பார்வை : 158

மேலே