வெற்றிக் கூட்டம்
பொறுப்பில்லாதவர்களென்று அறியப்பட்டவர்கள்தான்
போராட்டங்களை பொழுது போக்காகவும்
விடுப்பாகவும் எண்ணியவர்கள் தான்,
ஆனால் நம்பிய தலைவர்களின் நாவில் இருந்து நம்பும்படியானவைகள் வெளிப்பட போவதில்லை
என அறிந்தவுடன்,
வீறுகொண்டெழுந்து பார் முழுதின் பார்வையையும்
பதில் கிடைக்கா கேள்விகளின் மீது பதியச் செய்து,
இதுதான் செல்ல வேண்டிய பாதை என அதன் மீது ஒளியைப் பாய்ச்சிய உன்னதமானவர்களே,
தங்களின் விடா முயற்சியே
தமிழர்களின் முன்னுள்ள தடைகள் உடைக்கும்
என்பதை உணர்ந்தவர்கள் உங்களின் உணர்வுகளை
உலர வைக்க உரத்த முயற்சிகள்
மிகுந்த சிரத்தையோடு நடைபெறும் ,
விட்டுக்கொடுக்காதே நண்பா
கட்டிக்காப்பாத்து,
மாணவர்கள் கூட்டம்
வெட்டிக் கூட்டமல்ல
வெற்றிக் கூட்டம்.