சின்ன பேய்க்கதை
நள்ளிரவு 12மணி.இருட்டு.அந்தத்தெருவில் ஒரேயொரு வீடு மட்டுமே இருந்தது.அதில்தான் பேய் இருப்பதாகவும் இரவில் அந்த வழியாகச்செல்பவர்களை உள்ளே இழுத்து கொன்றுவிடும் என்று பேச்சு.தெருவின் ஒரு முனையில் அவனும் மறுமுனையில் அவன் நண்பர்களும் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.அவன் மெதுவாக நடக்கலானான்.காலையில் அவன் பேசியதை நினைத்தான்.
"பேய்'லாம் கிடையாது.எல்லாம் ரீல்.இன்னைக்கு நைட் நான் நடந்துபோய் காட்றேன்"
வீட்டை நெருங்கினான்.
மறுநாள்.
வீட்டின் கேட் எதிரில் அவன் கர்ச்சீப் கிடந்தது.அதில் இரத்தக்கறை!