அறிவை வைக்க மறந்துட்டானே...

ஒரு சமயம் கடையத்தில் உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து, சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.

பாக்கும் வச்சான்; பழமும் வச்சான்;
வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;
ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...
சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!

அப்போது அங்கு வந்த பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.

அருகிலிருந்தோர், " ஏன் சிரிக்கிறீர்கள்? " என்று கேட்டனர்.

"இப்பாட்டு நம் மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்" என்றார் பாரதியார்.

" எப்படி? "

"தமிழ்நாட்டு மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லா செல்வம் வச்சான். ஆனா, ஒன்னு வைக்க மறந்துட்டானே? "

"என்ன அது ? " என்று மீண்டும் கேட்டார்கள்.

"அறிவை வைக்க மறந்துட்டானே, மண்டையில் அறிவை வைக்க மறந்துட்டானே..."

இதைக் கேட்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.


நன்றி ;பாரதியார் குறிப்புக்கள்( படித்ததில் )

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (1-Apr-13, 5:32 pm)
பார்வை : 223

மேலே