கானல் நீர் பாசம் ...!
பாடசாலை முடிந்தால் வீட்டையே இருக்கமாட்டான் ......... ஜெயம் .....!!!
பெரியப்பாவீடு என்று ஓடிவிடுவான் தங்கள் வீட்டில் கிடைக்காத பாசம் பெரியப்பாவீட்டில் கிடைப்பதை அவன் உணர்ந்தான் ....
பெரியப்பா என்று கூப்பிட்டபடி ஓடினான் ....
வாடா மகனே என்று கட்டிப்பிடித்து தழுவி சாப்பிட்டியாடா ..? சாப்பிட்டா ..என்று ..சொல்லி பெரியம்மா சாப்பாடும் கொடுத்தார் ...
ஜெயம்....!!!!!!
யாராவது தோட்டம் துப்பரவு செய்பவன் இருந்தா கூட்டிக்கொண்டு வாப்பு சரியான குப்பையா
இருக்கு தோட்டம் என்று சொல்லி முடிக்கமுதல்
ஏன் பெரியப்பா ...?
நான்ஏன்செய்யமாட்டனா...?
என்று சொல்லியபடி தோட்டத்தில் இறங்கி துப்பரவு செய்தான் அழகாக ...
ராசா.... அம்மா தேடப்போகிரா...? இந்தாடா ..! போகும் வழியில் இந்த குப்பையை போட்டுட்டு போறியா ..? ...இதென்ன நான் போட்டிட்டு போகிறேன்..என்று சொல்லி எடுத்து சென்றான் ..!
ராசா ஜெயம் கவனமாய் படியடா ...! உன் மேல் படிப்பை நான் தான் உதவி செய்வேன் ..என்று
அவன் போகும் போது சொன்னார் ...!
அடுத்தநாள் பெரியப்பா வீட்டுக்கு சென்று பெரியம்மாவுக்கு சிறு உதவிகள்செய்து விட்டு ...
வீடு சென்றான் ...பெரியம்மா அவனில் கடும் பாசம்
பெரியப்பா சொனார் ஜெயம் ..நாளை ..இருவரும் படத்துக்கு போவம் என்ன ...என்று சொன்னதும் அவன் ஆகாயத்தில் பறந்தான் ....!
படம் பார்க்கும் ஆவலுடன் வந்தவன் பெரியப்பாவும் பெரியம்மாவும் தன்னைத்தான் பேசிக்கொண்டு இருப்பதை அறிந்து அசையாமல் நின்று கேட்டான் .....
என்னங்க ஜெயத்தோட படத்துக்கு போகப் போகிரியலா ..? என்று கேட்க ...போடி மக்கு ...
அவன் வந்தவுடன் எனக்கு தலையிடிக்குது என்று சொல்ல அவன் வேணாம் பெரியப்பா ..என்பான் ..
அவனைக்கொண்டு இன்று விறகு பொறுக்கலாம்
என்று சொனானர் ...!
ஜெயத்துக்கு நெஞ்சே வெடித்தது போல் ..இவ்வளவு ..காலமும் ...பாசமாக நடந்தது ...?
தனது வீட்டுக்கு செல்ல திரும்பினான் ...
வெளியே வந்த பெரியப்பா ஜெயம் எங்கே போகிரே ..? என்று கேட்க ....?
வாசல்ல போய் நிக்கப்போறன் பெரியப்பா ...அதுதானே என்ற இடம் ...என்றான் ...?
பெரியப்பாவுக்கு திக்கெண்டு போச்சு ....!