குறும்பு பார்வை

தென்னங்கீற்றை தென்றல் தாலாட்ட
இளநீருக்கு ஏங்குவதை போல்
கதிரவன் கீற்றின் வழியே எட்டிப்பார்க்க
பொல்லாத பையன் இவன் என்று
கார்மேகம் கதிரை மறைப்பது போல்
தலைவனின் பார்வையை கண்டதும்
தலை துவட்டிய பெண் முந்தானையால்
மார்பை மூடி மறைத்தாள்.
கோவை உதயன்