நட்சத்திரக் கவிதைகள்-6

மிக அற்புதமான படைப்புக்கள் ஐந்து கீழே. வாசித்து கருத்துப் பதிவதும் தேர்வளித்து இது போன்ற படைப்புக்களை பலரும் பார்க்க வழிகோலுவதும் உங்கள் கடமையாக இருக்கட்டுமே.
=============================================

வயிற்றிலெரியும் கொள்ளியெடுத்து வா-நிலாசூரியன்

விரக்தியின் உச்சியில் நின்று கதறுகிறது இங்கே எழுத்துக்கள். மிக உணர்வுப் பூர்வமாக எழுதி இருக்கிறார் நிலாசூரியன். கற்பனையும், இலக்கிய இலக்கணங்களும் மட்டும் இருந்தால் போதும் கவிதை எழுதிவிடலாம். அவற்றுடன் உண்மையான உணர்வுகள் இருந்தால் மட்டுமே இதுபோல கவிதைக்குள் உயிர் இருக்கும் !
மிக உணர்வுபூர்வமான படைப்பு!

Added by: நிலாசூரியன் கவிதை எண்–115104
மொத்த தேர்வு-9
=====================

விலைமகளிர் எல்லாம் - கா.ந.கல்யாணசுந்தரம

விலைமாது என்ற தலைப்பின் கீழே எழுதப்படும் வாழ்க்கை மிக சங்கடமானது. இன்பம் வழங்கும் இயந்திரமாக மட்டுமே பயன்படுத்திவிட்டு இறுதியில் மொத்த சமூகமும் தூக்கி எறிந்து விடும்..பாவம் இவரின் கவிதையின் நாயகியை தூக்கி எரிக்ககூட யாருமில்லை என்று மிக உருக்கமாக எழுதி இருக்கிறார். படைப்பாளிகளும் இந்த படைப்பை கண்டும் காணாது சென்றிருக்கிறீர்கள். தேர்வுகளும்,கருத்துக்களும் சாட்சி!
மிக உருக்கமான படைப்பு

Added by: கா.ந.கல்யாணசுந்தரம்-கவிதை எண்-111185
மொத்த தேர்வு-0
==========

குறிசொல்லும் சகுனத்தடைகள்- புலமி அம்பிகா !

நமது சமுதாய சீர்கேடுகளில் சகுனம் பார்த்தல் போன்ற மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் இன்னும் தீர்ந்தப்பாடில்லை. அவற்றில் சிலவற்றைத் தெரிந்தெடுத்து மிக அழகாக கவிதையாக்கி இருக்கிறாள் குழந்தாய் புலமி அம்பிகா !
மிக அழகான படைப்பு !

Added by: pulami ambika - கவிதை எண்–115019
மொத்த தேர்வு-23
================

அந்தரங்கப்பூச்சிகள் - பாட்டாளிபுத்திரன் ருத்ரா

அகிலத்தின் இறுதிநாள் குறித்து அதிரும் வரிகள் இந்த படைப்பில் வெடிக்கிறது.வருடுவது மட்டுமல்ல நெருடுவதும் கவிதை தான் இப்படி இருந்தால் !
மிக அற்புதமான படைப்பு !

Added by:பாட்டாளிபுத்திரன் ருத்ரா-கவிதைஎண்–114087
மொத்த தேர்வு-11
=================

அமர காதலி - தா.ஜோசப் ஜூலியஸ்

காதல் என்ற தலைப்பை வைத்து கவிதை எழுதா கவிஞனே கிடையாது. காதல் பற்றி எதை எப்படி எழுதினாலும் கவிதையாகிவிடும் என்று பலர் நினைகிறார்கள்.தப்பு! இதோ ஒரு அழகான காதல் கவிதை.
இந்த கவிதையில் உள்ள விசேசம் கருப்பொருளோ அதன் வரிகளோ கிடையாது. அந்தாதி என்ற படைப்பினை எவ்வளவு இலகுவாக இந்த தோழர் ஜூலியஸ் எழுதி இருக்கிறார் பாருங்களே! மிக மிக இலகுவாக தனது கவிதாப் புலமையினை நிரூபித்து இருக்கிறார் இங்கே.
மிக எளிமையான அழகான படைப்பு!

Added by: T. Joseph Julius - கவிதை எண் – 110009 - மொத்த தேர்வு-1

எழுதியவர் : (2-Apr-13, 7:41 am)
பார்வை : 129

மேலே