....எதிர்பார்ப்பும்... ஏமாற்றங்களும்....
எமக்கே எமக்கென்று எண்ணி இறுமாந்திருந்தேன்...
எக்கேடுகெட்டாவது போ என்று எக்களித்தது விதி...
விழுந்தால் உடைந்துவிடும் கண்ணாடிபோன்ற எம்மனம்
விழாமலே உடைந்து சிதறிவிட்டது சிலநொடிகளில்...
ஓர் ஆறுதலுக்காக உனைத்தேடி வந்தேன்,,, ஆனால்,
ஓராயிரம் தேவைகள் உனக்காக காத்திருப்பதால்,
போகுமிடம் தெரியாமல் திகைத்து நிற்கின்றேன்.
எண்ணத்தின் ஆசைதனை கோர்த்துவிட்டேன்...
ஏக்கங்களை சுருதியாக்கி மீட்டினேன் வீணையில்...
எதுவும் நிரந்தரமில்லை என்பதில் ஐயமில்லை...
என்மூச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமறந்தவன்
என்வாழ்வை ஒரு கேள்விக்குறியில் நிறுத்தி விட்டான்...
யோசிக்கின்றேன்.... யாசிக்கின்றேன்........
உலகத்தின் எல்லை எங்கிருக்கின்றது புரியாததால்.....!