உறக்கமே உறக்கத்தை தா ....!
உறக்கத்தை பார்த்து கேட்டேன் ..
உறக்கமே எனக்கு உறக்கத்தை கொடு ...
உறக்கம் கேட்டது ....!
என் நீ இதுவரை உறங்க்கியதே இல்லையா ...?
உறங்கினேன் ............!
சிலநாட்கள் பூபாலமாக ...!
சில நாட்கள் நீலாம்பரியாக ...!
அதுதானே உறக்கத்தின் தொழிட்பாடு...
என்றது -உறக்கம் ....
இல்லை எனக்கு சலனமே ..
இல்லாத உறக்கம் வேண்டும்...
உறக்கம் என்னை பார்த்து பரிதாபத்துடன் ...
சிரித்தது ....!
இன்னும் நீ உறக்கத்தில் வாழும் நாட்கள்
நிறைய உண்டு ....என்றது ...!