அரளி மலர் புன்னகை கொண்டவள் 555

பெண்ணே...
அரளி தோட்ட
பூக்களை ரசித்தேன்...
விஷமென்று
தெரிந்தும்...
துளி தேன்
இருப்பதால்...
உன்னில் நான் இருப்பேன்
என்று நினைத்தேன்...
நீ என்னில்
இருப்பதால்...
அரளி மலர்கூட
உண்டால்தானடி விஷம்...
நீ உன் ஏளன புன்னகையில்
தந்தாயடி எனக்கு விஷம்...
அரளி தோட்டத்தில்
வாழ்ந்த போதுகூட...
அச்சமில்லடி
எனக்கு...
உன் ஏளன
புன்னகையை கண்டு...
வாழமுடியலடி
எனக்கு...
அரளி மலர் புன்னகை
கொண்டவளே.....