வரதட்சணை

பெண்ணை பெற்றவன் மண்ணுக்குள் போகுறான்
விலைவாசி போலவே வரதட்சணை ஏறுது
ஏழை பெண்கள் என்னத்தான் ஆவது
மனித உலகம் எங்கே போகுது !

ஆசையாய் பெண்ணை அன்பாய் வளர்த்தான்
அதற்கும் கல்வி போதிக்க வைத்தான்
பாசம் நேசம் சொல்லி கொடுத்தான்
பெண்ணை கடவுள் என எண்ணி வளர்த்தான் !

குடும்ப தகுதி எல்லாம் பெற்றவள்
குத்துவிளக்காய் நிமிர்ந்து நிற்கிறாள்
பருவத்தின் வளர்ச்சி பக்குவமாய்
அவளை திருமணம் வரை கொண்டு போகுது !

இருப்பதும் வருவதும் சரியாய் போக
இன்னும் கேட்குது மாமியார் சொந்தம்
உழைத்து சோர்ந்த அப்பன்காரன்
ஊரெல்லாம் கேட்கிறான் கல்யாண கடன்!

காது குத்துக்கு மாமன் போட்டான் கம்மல்
மஞ்சள் நீருக்கு மச்சான் போட்டான் செயின்
கல்யாண நேரம் வருகையிலே
பஞ்சாய் பறந்தது எல்லா சொந்தம்!

வீர பரம்பரை என்று சொல்லி வீணாய் சுற்றும்
ஆடவர் கூட்டம் காரும் பணமும்
கட்டிலும் பீரோவும் சோபாவும்
சோறாக்க சாமானும் செலவுக்கு பணமும்
ஒட்டுமொத்த குத்தகையை மனைவியை கேட்குது!

வீட்டை விற்றான் விளைந்த காட்டையும்விற்றான்
பெண்ணின் திருமணம் நடத்தி வைத்தான்
சூளலுக்கு கொஞ்சம் , பிரசவத்திற்கு கொஞ்சம்
கடனை வாங்கி கடமையை செய்தான் !

கொடுத்ததும் பற்றாமல் இன்னும் கேட்க
வரதட்சணை பிரச்சனை வளர்ந்து போகவே
வாழ்வில் நிம்மதி குறைந்து போகுது
அடிக்கடி வரும் சண்டையிலே
மகளின் மண்டை மட்டும் உடையுது!

வாரிகொடுத்தவனிடம் இனி ஒன்றும் இல்லை
புகுந்த வீடு போனவள் பிறந்த வீடு திரும்பவே
துடித்து சாகிறான் ஒவ்வொரு அப்பனும்
வெறுத்து போகிறான் பெண் பிள்ளைகளையே !

எதுவும் தனக்கு வரும்போதுதான் தெரியும் தவிப்பு
பெண்ணின் கொடுமை இன்னும்வேண்டாம்
இதுவே அதிகம் இன்னும் வேண்டாம்
வரமாக வருபவளிடம் எதற்கு தட்சணை!

உனக்கொரு தங்கையும் இருக்கிறாள் மறக்காதே
துணையாய் வந்தவளை இணையாய் மதிப்போம்
பெண்கள் துயர் தீர்ப்போம்,உனக்கும எனக்கும் உயிர் கொடுத்த பெண்மையை காப்போம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Apr-13, 8:12 am)
Tanglish : varathatchanai
பார்வை : 165

மேலே