புரியாத புரிதல்கள்

ஒரு நண்டு
வளைக்குத் திரும்புவதை
கவனியுங்கள்
தண்ணீரைக்
காயப்படுத்தாமல் நீந்தும்
மீனின் பக்குவத்தை
கவனியுங்கள்
இழை அறுபடாமல்
தன் வலையின் மீதான
சிலந்தியின் நடையின்
மென்மையை
கவனியுங்கள்
நாம்
உணர்தலில் மட்டும்
அறியப்படும்
தழுவிய தென்றலின்
வரவைக் கவனியுங்கள்
உங்கள் முன்னாலும்
உங்களைச் சூழ்ந்தும்
நீங்கள் அறியாமலும்
கவனிக்கப் படாமலும்
நடமாடிக் கொண்டிருக்கும்
நிசப்தத்தின்
நீட்சியின் காட்சியாக.,
அவைகள்
விரிவதை காணலாம்
என்னைப் போலவும் !