பெண்ணே நீ என்ன இயந்திரமா
அன்று வீடே உலகம்,
இன்று உலகமே வீடு,
சமுதாய மாற்றத்தில் வெளிச்சம் பார்த்தும் ,
வீட்டு சிறைக்குள் இன்னும் மாட்டி தவிக்கிறாய் !
உன்னால் உயிர்கள் ஜனனம் ,
உலகமே உன்னுள் அடக்கம் ,
பரிசுத்த உறவாய் பரிணாமம் ஆனவளே
நீ படும் பாட்டை கொஞ்சம் சொல்கிறேன் !
இயந்திர உலகில் நீ கூலி வாங்காத
வேலைக்கார இயந்திரமாகிவிட்டாய்
பொறந்த வீடும் புகுந்த வீடும் ,
நீ உழைத்து தேயும் மைதானம் ஆகிடுச்சு !
இன்னொரு கொடுமை சொல்லப்போனால்
வரமாய் போகும் உன்னை
வரதட்சணை கேட்டு கத்து கிடக்கு
ஓர் உலகம் !
சுற்றும் பூமியாய் ஓய்வில்லாமல்
காலையில் தொடங்கி மாலை வரையில்
உழன்று உழைக்கிறாய் ,
தலை சுழன்று படுக்கிறாய் !
கிணத்தடி தொடங்கி அடுப்படி வரையில்
ஆயிரம் வேலைகள் அடுக்கி கிடக்குது ,
வேலைக்கு செல்லும் கணவன் முதலே
பள்ளிக்கு போகும் குழந்தை வரையில்
கடமைகள் செய்தும் கன்னயரமுடியலே !
உற்ற உறவுகள் வெறுத்து ஒதுக்கி
ஓடிக்கொண்டிருக்கிறாய் சம்பளம் தேடி
பணத்திருக்கு கொடுக்கும் இடத்தை கூட
உன் மனதிற்கு யாரும் கொடுப்பதும் இல்லை !
சுதந்திர உலகில் உனக்கென என்ன இருக்கு
அலுவலக வேலைகள் அனைத்தும் முடித்தும்
வீட்டு வேலைகள் ஆரம்பமாகுது !
ஆணுக்கு இணையாய் சொல்லிக்கொண்டாலும்
உனக்கு வேலைகள் பார்த்தால் சற்றே அதிகம்
வார ஓய்வில் இருப்பான் கணவன்
நீயோ ஞாயிறில் கூட உழைத்து கொண்டிருப்பாய் !
காசும் பணமும் கண்ணுக்கு தெரியும்
உன் உள்ள உணர்வுகள் யாருக்கு புரியும்
விந்தைகள் நிறைந்த வியாபார உலகில்
நீயோ ஓர் நடமாடும் இயந்திரம் !
சாதலும் வாழ்தலும் இடைப்பட்ட காலம்
உன்னை துரத்துது ஓராயிரம் பேய்கள்
வீதி வெளிச்சமும் உனக்கு இருட்டோ
வீணாய் பலிகள் எத்தனை எத்தனையோ !
மிருக வதைக்கும் தண்டனை உண்டு
பெண்ணே உனக்காய் என்ன உண்டு
மனம் கொன்று பணம் தின்னும்
மனிதாபிமானமற்ற உலகத்தில்
பெண்ணே நீ என்ன இயந்திரமா !