ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி ...!
ராம நாதன் துறைக்கு ஒரே ஒரு அழகான மகள் கீதா
ராமனாதனின் வீட்டுக்கு அவரது நெருங்கிய நண்பனின் மகன் ராஜு வந்து போவான் ..
அவனது நற்பண்புகளில் ராமநாதனே மயங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு இந்த நவீன காலத்தில் ஊரே கெட்டுப்போய் இருக்கும் காலத்தில் இப்படியொரு பிள்ளையா ? என்று அடிக்கடி ராமநாதன் மகள் கீதாவிடம் கூறியதும் புகழ்ந்ததும் உண்டு ...
அப்பாவின் நற்சான்று தலின் விளைவு ராஜீ மீது கீதாவுக்கு காதல் ஏற்பட்டது...
காலம் கடந்தோடியது ..கீதாவின் காதல் ராமநாதனுக்கு தெரியவே ...கொதித்து விழுந்தார் ..
அந்த காதலை ஏற்கவும் அவர் தயாராக இல்லை ..
கீதா கேட்டாள் அப்பா நீங்கள் தானே சொன்னீர்கள்
அருமையான பையன் ..என்றெல்லாம் ....
ராமநாதன் சொன்னார் காரணங்கள் கீதாவுக்கு " திக் "
என்று ஆகிவிட்டது ....!
அட நீ ஒண்ணு...!
அவனை அடிக்கடி வீட்டுக்கு வரப்பண்ணி என் வெளி வேலையைசெய்யப்பண்ணுவதற்கு..அப்படியெல்லாம் கதைத்தேன் ... நீயும் அதை நம்பிட்டையா..?
அவனெல்லாம் உனக்கு சரிவரமாட்டான் மகள் ..
கீதா இடிந்துபோய் இருந்தாள் .....!